“ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி?”- எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

"ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி?"- எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

 

இன்று (ஜூன் 12) நடைபெறும் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் அமெரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தகுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய கால்பந்து அணி….சர்ச்சையில் கத்தார் வீரர்கள்….சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகளுடனான லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்றிரவு 08.00 மணிக்கு நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

“எம்.ஜி.ஆரின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தது யாரு தெரியுமா?”- நடிகர் பாக்யராஜ் விளக்கம்!

இப்போட்டியில் அமெரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்க அணியும் முதல் 2 போட்டிகளில் கனடா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி சம பலத்துடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.