“எம்.ஜி.ஆரின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தது யாரு தெரியுமா?”- நடிகர் பாக்யராஜ் விளக்கம்!

"எம்.ஜி.ஆரின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தது யாரு தெரியுமா?"- நடிகர் பாக்யராஜ் விளக்கம்!

 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கலந்து கொண்டு பேசினார்.

நடிகர் சுரேஷ் கோபியின் அதிரடி பேட்டியால் பரபரப்பு!

அப்போது நடிகர் பாக்யராஜ் கூறியதாவது, “எம்.ஜி.ஆர். அப்படினு சொன்னதுமே கைதட்டல், விசில் அடிச்சிப் பாப்பேன். நானும் சேர்ந்து தான் விசில், கைதட்டல் அடிச்சிட்டு இருப்பேன். எம்.ஜி. இராமச்சந்திரனு வந்தா யாரு பேசமாக, கைதட்டாம, அப்படியே உட்காந்துட்டு இருப்பாங்க. ஏனா, அவங்க மூணு எழுத்து பாத்தே பழகி போச்சு. அவருடைய ரசிகர்கள் அந்த அளவிற்கு இருந்தாங்க.

இவ்வளவு டேலண்ட், இவ்வளவு கைதட்டல் வாங்கற இது எல்லாமே ஒரே ஒரு விஷயத்துல ஈக்கோல் ஆச்சு. அந்த ஒரு விஷயம் என்னனா, நம்ம கலைஞரின் பேனா தான். இவ்வளவு ஆளுமையில் உள்ள ஒருத்தரு வந்து, நமக்கு அடிப்படை பேஸ் கலைஞர் தான் என்பது எம்.ஜி.ஆருக்கு நன்றாகத் தெரியும். கலைஞர் பற்றி தெரிந்துக்க ஆரம்பிச்சன். அவர் எழுதுன படங்கள் எல்லாம் கவனிக்க ஆரம்பிச்சன்.

“உங்க ட்ரீம் என்ன?”- பத்திரிகையாளர்களை வியக்க வைத்த பாலாவின் பதில்!

சினிமாக்கு வாய்ப்பு தேடி வரவங்க, கலைஞரின் வசனங்கள மனப்பாடம் செய்து பேசி காமீப்பாங்க. ஆரம்பக் காலத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தது கலைஞரின் எழுத்துக்கள் தான்” எனத் தெரிவித்துள்ளார்.