“பிரேம்ஜி திருமணத்திற்கு இளையராஜா, யுவன் வராதது ஏன்?”- குடும்பத்தின் மீது அப்படி என்ன வெறுப்பு கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

"பிரேம்ஜி திருமணத்திற்கு இளையராஜா, யுவன் வராதது ஏன்?"- குடும்பத்தின் மீது அப்படி என்ன வெறுப்பு கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

 

திரைப்படத்தின் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் கங்கை அமரன். இவரது மூத்த மகனான வெங்கட் பிரபு, நடிகராகவும், திரைப்பட இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். இவர் தற்போது விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

“உங்க ட்ரீம் என்ன?”- பத்திரிகையாளர்களை வியக்க வைத்த பாலாவின் பதில்!

இளைய மகனான பிரேம்ஜி, திரைப்பட நடிகராகவும், பாடகராகவும் இருந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலியை பிரேம்ஜி கரம் பிடித்தார். திருமணத்தில் நடிகர்கள் வைபவ், ஜெய், மிர்ச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எனினும், இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கலந்து கொள்ளாதது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறுகையில், பிரேம்ஜி திருமணம் செய்துக் கொண்ட மணப்பெண்ணின் வயது 25. அவர் சேலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கிட்டத்தட்ட இருவருக்கும் 20 வயது வித்தியாசம்; காதல் என்பதால் இதெல்லாம் சாதாரணம் தான்.

“ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி?”- எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

பிரேம்ஜி திருமணத்தில் இளையராஜா கலந்து கொள்ளாதது வேதனையாக இருக்கு. தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமே தம்பிகள் என்பதை எல்லாம் மறந்துவிட்டு இளையராஜா இப்படி நடந்துக் கொள்கிறார். பெயர்வர்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு ஆகியோர் அன்போடு பழகி வருகின்றனர். இந்த திருமணத்திற்கு யுவன் வந்திருக்க வேண்டும்; அவர் துபாயில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தம்பி மீது யுவனுக்கு என்ன வெறுப்பு என்பது எனக்கு தெரியவில்லை; சிலர் யுவன் மதம்மாறிவிட்டதால் கோயிலில் நடந்த திருமணத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

பிரேம்ஜி திருமணத்திற்கு யுவன் சங்கர் ராஜா வராதது குறித்து சமூக வலைத்தளங்களில் பிரேம்ஜி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.