டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த 2017- ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘தப்பாட்டம்’ என்ற படத்தின் காட்சியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது ‘தப்பாட்டம்’ திரைப்படத்தை இணையவாசிகள் தேடி பார்த்து வருகின்றனர்.
“ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி?”- எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!
இது குறித்து பேசுவதற்காக தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தப்பாட்டம் திரைப்படத்தின் நடிகர் சுதாகர், “மரியாதைக்குரிய எலான் மஸ்க் ட்விட்டர் பேஜ்ல ‘தப்பாட்டம்’ திரைப்படத்தின் காட்சியை பகிர்ந்திருக்கிறாரு. இது உலக நாடுகளுக்கு பரவி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் சந்தோஷத்தை பகிர்ந்து வராங்க. தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்னு நினைக்கிறன்.
இந்த தப்பாட்டம் திரைப்படம் சிறிய முதலீட்டுள்ள எடுக்கப்பட்ட படம். இந்த படத்தின் புகைப்படத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்திய எலான் மஸ்க்- க்கு நன்றி. எலான் மஸ்கிற்கு இந்த புகைப்படத்தை கொண்டு போய் சேர்த்து ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி. தப்பாட்டம் திரைப்படம் பறை இசை பற்றியும், கணவன்- மனைவி வாழ்க்கை குறித்தும் எடுக்கப்பட்ட படம்தான்” எனத் தெரிவித்துள்ளார்.