டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் நடராஜன் சேர்க்க வாய்ப்பு?

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் நடராஜன் சேர்க்க வாய்ப்பு?

 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாகப் பரவி வருகிறது.

“ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்திய அணி?”- எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்!

 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகளுடனான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றது.

குறிப்பாக, வெற்றி மட்டுமின்றி பல்வேறு சாதனைகளையும் இந்திய அணி படைத்துள்ளது. எனினும், அமெரிக்க கிரிக்கெட் மைதானங்கள் சுழற்பந்து ஏற்றார் போல் இல்லை என்றும், அதனால் தான் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழப்பதாக கூறும் கிரிக்கெட் விமர்சகர்கள், வேகப்பந்துக்கு தகுந்தாற் போல் அமெரிக்க கிரிக்கெட் மைதானங்கள் இருப்பதால் கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்க்க இருப்பதாக திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

“எம்.ஜி.ஆரின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தது யாரு தெரியுமா?”- நடிகர் பாக்யராஜ் விளக்கம்!

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான நடராஜனை டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் சேர்க்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த தகவலுக்கு கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், விமர்சகர்கள் பலரும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

நடராஜன் தற்போது இந்தியாவில் இருப்பதால் அவர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வாய்ப்பில்லை.மேலும், அமெரிக்க கிரிக்கெட் மைதானங்களில் பயிற்சி எடுக்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கூறுகின்றனர்.