“அதுதான் தமிழரின் குணம்…..”- நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்!

"அதுதான் தமிழரின் குணம்....."- நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்!

 

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விழாவில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சிறப்புரையாற்றினார்.

தமிழ் திரைப்பட காட்சியைப் பகிர்ந்த எலான் மஸ்க்…. திரைப்படக்குழு உற்சாகம்!

அப்போது நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, “இந்தியாவில் உள்ளவங்க மூளை; தலனு சொன்னா டெல்லி; இதயம்னு சொன்னா மும்பை. பொலிடிகல் கேப்பிட்டல் டெல்லி; பினான்சியல் கேபிட்டல் மும்பை. பாம்பேல அம்பானி, டாடா ஆகியோரிடம் நெருங்கி பேசி அவங்க வீட்டு போய் சாப்பிட்ட சந்தர்பங்களாம் எனக்கு கிடைச்சது. அதேபோல், டெல்லியில பிரதமர் நரசிம்மராவில் இருந்து வாஜ்பாய், மோடி வரை அவர்களுடன் உட்காந்து சாப்பிட்டு பேசக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைச்சது.

 

அம்பானி ஆகட்டும், டாடா ஆகட்டும், மத்திய அமைச்சர்கள் ஆகட்டும் பர்சனல் மேனேஜர்ஸ், பர்சனல் அட்வைசர்ஸ் 70% முதல் 75% வரை தமிழ் ஆளுங்க தான் இருப்பாங்க. நான் கேட்டன், எப்படி தமிழ் ஆளுங்கள வச்சிருக்கிங்கனு. அதுக்கு அவங்க சொன்னாங்க, தமிழியன்ஸ் புத்திசாலிங்க, உழைப்பாளிங்க, நன்றியுள்ளவங்க, நாணயமாக இருப்பாங்கனு சொன்னாங்க. அந்த குணம் தான் தமிழருடைய குணம். அதனால தான் தமிழர்கள் எங்க போனாலும் சந்தோசமா, ஹாப்பியா இருக்காங்க.

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் நடராஜன் சேர்க்க வாய்ப்பு?

2047- ஆம் ஆண்டுல இந்தியா வல்லரசு ஆகும்னு சொல்லிருக்காங்க, கண்டிப்பா சொல்றன் இந்தியா வல்லரசு நாடு ஆகும் என்பதுல்ல சந்தேகம் வேண்டாம்” உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.