அர்ஷ்தீப் சிங்கின் அபார பந்து வீச்சு- அமெரிக்காவை வீழ்த்திய இந்திய அணி!

சூப்பர் 8 சுற்றுக்குள் இந்திய அணி!

 

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் லீக் தொடரில் அமெரிக்க அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி.

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் நடராஜன் சேர்க்க வாய்ப்பு?

டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் லீக் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் நியூயார்க்கில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய அமெரிக்க அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 18.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

அமெரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ்குமார் 27, ஸ்டீவன் டெய்லர் 24, ஆண்டர்சன் 15 ரன்களை எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 50, ஷிவம் துபே 31, ரிஷப் பந்த் 18 ரன்களை அடித்தனர். அதேபோல், இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 4, ஹர்திக் பாண்டியா 2, அக்சர் படேல் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

“அதுதான் தமிழரின் குணம்…..”- நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்!

ஏற்கனவே 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி அமெரிக்க அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய நிலையில் இந்தியாவும் தகுதிப் பெற்றுள்ளது.