குவைத் தீ விபத்து- பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

குவைத் தீ விபத்து- பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

 

குவைத் நாட்டில் NBTC நிறுவனம் தங்களது தொழிலாளர்களை தங்க வைத்திருந்த மாங்காப் குடியிருப்பில் நேற்று (ஜூன் 12) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கி 50- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தீ விபத்தில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“அதுதான் தமிழரின் குணம்…..”- நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்!

உயிரிழந்தவர்களில் 40- க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும், இவர்கள் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்களுக்காக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்குள் +9118003093793, வெளிநாட்டில் உள்ளவர்கள் +918069009900, +918069009901 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு இந்தியத் தூதரகம், தமிழ் அமைப்புகள் மூலம் உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, குவைத் தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மன்னர் ஷேக் அல் சபா உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை குவைத்திற்கான இந்திய தூதர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். குவைத் தீ விபத்து குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். உயிரிழந்த உடல்களை மீட்க இந்திய விமானப் படை விமானத்தை அனுப்பவும் முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் 8 சுற்றுக்குள் இந்திய அணி!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில், “தீ விபத்தில் சில உடல்களை அடையாளம் காண முடியாததால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தரை தளத்தில் இருந்து பரவிய தீ அடுக்குமாடி குடியிருப்பில் பரவியது. விபத்தில் இருந்து தப்பிக்க சிலர் மாடியில் இருந்து குதித்ததில் உயிரிழந்தனர். தீ மற்றும் புகையில் சிக்கி மற்றவர்கள் உயிரிழந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழிலாளர்களின் உடல்களை தாயகத்திற்கு கொண்டு வர மத்திய அமைச்சர்கள் குவைத் நாட்டிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.