நடிகர் பிரதீப் விஜயன் மரணம்!-நடந்தது என்ன?

நடிகர் பிரதீப் விஜயன் மரணம்!

 

நடிகர் பிரதீப் விஜயன் (வயது 45), அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருப்பது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அதுதான் தமிழரின் குணம்…..”- நடிகர் ரஜினிகாந்த் பெருமிதம்!

தெகிடி, மேயாத மான், லிஃப்ட், வட்டம், டெடி, இரும்புத் திரை உள்ளிட்டப் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகர் பிரதீப் விஜயன். குறிப்பாக, வங்கி மேலாளர், ஐ.டி. நிறுவன மேலாளர் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் பிரதீப் விஜயன்.

 

சென்னை பாலவாகத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த நடிகர் பிரதீப் விஜயனுக்கு அவரது நண்பர்கள் தொலைபேசியில் தொடர்புக் கொண்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக தொலைபேசி அழைப்பை யாரும் எடுக்காததால் சந்தேகமடைந்த நண்பர்கள், காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து, காவல்துறையினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற நண்பர்கள், குளியலறையில் நடிகர் பிரதீப் விஜயன் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து, அவரது உடல் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குவைத் தீ விபத்து- பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட நடிகர் பிரதீப் விஜயன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.