அதிரடி வீரர் விராட் கோலிக்கு என்னாச்சு!

அதிரடி வீரர் விராட் கோலிக்கு என்னாச்சு!

 

50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜொலிக்கும் விராட் கோலிக்கு 20 ஓவர் உலகக்கோப்பை சோதனையாகவே அமைந்திருக்கிறது. ஆக்ரோஷமான வீரரை அமெரிக்க மண் அனைத்து வைத்திருப்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

நடிகர் பிரதீப் விஜயன் மரணம்!-நடந்தது என்ன?

50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதைப் பெற்ற இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலிக்கு ஐ.பி.எல். தொடரும் சிறப்பாகவே அமைந்துள்ளது. நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 741 ரன்களை அவர் குவித்திருந்தார். இதன் மூலம் ஐ.பி.எல்.லில் 2 முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

 

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை விராட் கோலியின் திறமையை சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேட்ஸ்மேன்களுக்கு எந்த வகையிலும் சாதகமான சூழல் இல்லாத நியூயார்க் மைதானத்தில் ரன் மெஷின் எனப்படும் விராட் கோலி ரன்களைக் குவிக்க திணறி வருகிறார்.

 

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்னில் நடையைக் கட்டிய விராட் கோலி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 4 ரன்னில் பெவிலியில் திரும்பினார். அடுத்த போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்ட போதும் விராட் கோலிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 20 ஓவர் உலகக்கோப்பையில் முதன்முறையாக கோல்டன் டக் அவுட் ஆகி தனது ரசிகர்களை மூன்றாவது முறையாக அவர் ஏமாற்றி இருக்கிறார்.

 

20 ஓவர் உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி வெறும் 5 ரன்களை மட்டுமே விராட் கோலி எடுத்துள்ளார். அதே நேரத்தில், மூன்று போட்டிகளில் குறைவான ரன்களை எடுத்ததால் விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்று கூற முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். விராட் கோலி விரைவில் சிறந்த பார்முக்கு திரும்புவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச போட்டிகளில் மூன்றாண்டுகளுக்கு மேலாக சதம் அடிக்காமல் இருந்த விராட் கோலி விமர்சனங்களை விரட்டி அடிக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் சதம் அடித்து சிறந்த பார்முக்கு திரும்பியிருந்தார்.

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம்- ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

ஃபுளோரிடா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கனடா அணிக்கு எதிரான போட்டி விராட் கோலிக்கு கம்பேக் போட்டியாக அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.