விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம்- ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம்- ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

 

நடிகர் விஜய் சேதுபதியின் 50- வது படம் ‘மகாராஜா’. ‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனுராக் காஷ்யப், நட்டி, பாய்ஸ், சிங்கம் புலி, மணிகண்டன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

குவைத் தீ விபத்து- மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் ஆறுதல்!

இப்படத்தை சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வைரமுத்துவின் பாடல் வரிகள் ‘மகாராஜா’ படத்திற்கு மேலும் மெருகூட்டியுள்ளது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அர்ஷ்தீப் சிங்கின் அபார பந்து வீச்சு- அமெரிக்காவை வீழ்த்திய இந்திய அணி!

இந்த நிலையில், ‘மகாராஜா’ திரைப்படம் நாளை (ஜூன் 14) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தைக் கொண்ட ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.