குவைத் தீ விபத்து- மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் ஆறுதல்!

குவைத் தீ விபத்து- மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர் ஆறுதல்!

 

குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பதறிய தொழிலாளர்கள், மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றனர். இதனால் தீ விபத்தில் சுமார் 50- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 40- க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

குவைத் தீ விபத்து- பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!

பிரதமரின் அறிவுறுத்தலின் படி, குவைத் நாட்டிற்கு சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 7 இந்தியர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அத்துடன், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

 

இது குறித்து குவைத் நாட்டிற்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இந்தியர்களை மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு வழங்கும். மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள், செவிலியர்கள், இந்தியர்களை நன்றாகக் கவனித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதைத் தொடர்ந்து, குவைத் நிதியமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும்; உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று குவைத் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

குவைத் தீ விபத்து- நடிகர் விஜய் இரங்கல்!

இதனிடையே, குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிவாரணத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.