குவைத் தீ விபத்து- உயிர்பிழைத்தவரின் பரபரப்பு வாக்குமூலம்!

குவைத் தீ விபத்து- உயிர்பிழைத்தவரின் பரபரப்பு வாக்குமூலம்!

 

குவைத்தில் இந்திய தொழிலாளர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் உயிர் தப்பியது எப்படி என்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழர் உருக்கமாக பேட்டியளித்துள்ளார். அதனை தற்போது விரிவாகப் பார்ப்போம்!

நடிகர் பிரதீப் விஜயன் மரணம்!-நடந்தது என்ன?

குவைத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழர் கூறியதாவது, “தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 150 பேர் வசித்து வந்தோம். ஒவ்வொரு மாடியிலும் 4 வீடுகள் உள்ளது. தீ விபத்து ஏற்பட்டதுடன் வீட்டில் இருந்தவர்கள் மேலே இருந்து குதித்தனர். வெப்பம் அதிகமானதால் மொட்டை மாடிக்கு செல்ல அச்சம் அடைந்தனர்.

 

இரவுப் பணிக்கு 17 பேர் சென்றுவிட்டதால் பாதிப்பில்லை. வெப்பம் கூட இல்லை; புகை தான் அதிக அளவில் பரவியது. பால்கனி உட்பட அனைத்து பகுதிகளிலும் புகை சூழ்ந்திருந்தது. இந்த குடியிருப்பில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் வசித்து வந்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, குவைத் தீ விபத்தில் சிக்கி 40- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் உடல்கள் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மத்திய இணைய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம்- ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

அதன் தொடர்ச்சியாக, தொழிலாளர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.