தொடங்கியது யூரோ கால்பந்து திருவிழா…..ரசிகர்கள் உற்சாகம்….பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

தொடங்கியது யூரோ கால்பந்து திருவிழா.....ரசிகர்கள் உற்சாகம்....பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

 

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் ஜெர்மனியில் இன்று (ஜூன் 14) தொடங்கி வரும், ஜூலை 14- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக் சுற்றின் முதல் போட்டி, ஜெர்மனி- ஸ்காட்லாந்து அணிகள் இடையே, இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.

அதிரடி வீரர் விராட் கோலிக்கு என்னாச்சு!

இந்த தொடரின் நடப்பு சாம்பியன் இத்தாலி அணி உட்பட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் (ஜூன் 14- ஜூன் 26) பங்கேற்கின்றன. ஜூலை 09, 10 ஆகிய தேதிகளில் அரையிறுதியும், ஜூலை 14- ல் இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளது. லீக் மற்றும் நாக்- அவுட் என மொத்தம் 51 போட்டிகள் நடைபெறவுள்ளன.

தொடங்கியது யூரோ கால்பந்து திருவிழா.....ரசிகர்கள் உற்சாகம்....பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

கோடிகளில் புரளும் யூரோ கால்பந்து!

24 அணிகள் பங்கேற்கும் யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை சுமார் ரூபாய் 3,000 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூபாய் 72 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 44 கோடியும் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. அதேபோல், யூரோ கால்பந்து போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ரூபாய் 83 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.

குவைத் தீ விபத்து- உயிர்பிழைத்தவரின் பரபரப்பு வாக்குமூலம்!

ஒவ்வொரு சுற்று வெற்றிக்குரிய தொகையைச் சேர்த்தால் வெற்றி வாகை சூடும் அணிக்கு மொத்தம் ரூபாய் 255 கோடியைக் குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. யூரோ கால்பந்து திருவிழாவால், ஐரோப்பிய நாடுகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.