“நான் நிச்சயமாக எதிர்பார்க்கல….”- நடிகர் விஜய்சேதுபதி மகிழ்ச்சி!

"நான் நிச்சயமாக எதிர்பார்க்கல...."- நடிகர் விஜய்சேதுபதி மகிழ்ச்சி!

 

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மகாராஜா’ திரைப்படம் இன்று (ஜூன் 14) உலகம் முழுவதும் 1,915 திரையரங்களுக்கு மேல் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதிரடி வீரர் விராட் கோலிக்கு என்னாச்சு!

குறிப்பாக, பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. ‘மகாராஜா’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளைப் பார்த்தவர்கள், நன்றாக இருப்பதாகவும், நல்ல விமர்சனம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

மேலும், படத்தின் திரைக்கதை, விஜய்சேதுபதியின் நடிப்பு, இசை என அனைத்தும் கச்சிதமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்த நடிகர் விஜய்சேதுபதி, ரசிகர்களுடன் ‘மகாராஜா’ படத்தைக் கண்டுகளித்தார்.

தொடங்கியது யூரோ கால்பந்து திருவிழா…..ரசிகர்கள் உற்சாகம்….பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஜய்சேதுபதி, ‘மகாராஜா’ படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும்னு நான் நிச்சயமா எதிர்பார்க்கல. படத்தின் ஸ்கிரீன் பிளே ரொம்ப நல்லாருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ரெஸ்பான்ஸ் கொடுத்த அனைவருக்கும் ரொம்ப நன்றி எனத் தெரிவித்துள்ளார்.