“கதாநாயகனாக மாறும் போது கஷ்டம்; பாத்து இருந்துக்கோ..” – சூரியை எச்சரித்த சசிகுமார்!

"கதாநாயகனாக மாறும் போது கஷ்டம்; பாத்து இருந்துக்கோ.." - சூரியை எச்சரித்த சசிகுமார்!

 

நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. இதையடுத்து, ‘கருடன்’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், கருடன் திரைப்பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம்- ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

விழாவில் பேசிய திரைப்பட இயக்குநரும், நடிகருமான சசிகுமார், “தோல்வி நாளே எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கும்; தோல்வியை ஒத்துக்கணும்; அப்பதான் அடுத்த படத்துல ஜெயிக்க முடியும். தோல்வியைத் தாராளமாக ஒத்துக் கொள்ள வேண்டும். தோல்வியை ஒத்துக்கிட்டா தான் வெற்றியை நாம ஏத்துக்க முடியும். தோல்வி நாம ஒரு காரணம் தான் சொல்லுவோம். இந்த படம் தோல்வி அடைந்தா இதுதான் காரணமும்னு சொல்லிடுவோம்.

 

ஆனா வெற்றிக்கு நாம பல காரணங்கல சொல்லுவோம்; கருடன் படம் வெற்றிக்கு நிறைய காரணம் சொன்னாங்க. கருடன் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் புரொடியூசர் குமார் தான். எல்லாரையும் விட படத்து மேல அதிக நம்பிக்கை வச்சவரு அவரு தான். படம் முழுவதும் கூட இருந்து சப்போர்ட் பண்ணண வெற்றிமாறன் சாருக்கும் நன்றியைத் தெரிவிச்சிகறன்.

அதிரடி வீரர் விராட் கோலிக்கு என்னாச்சு!

சூரிக்காக இந்த படத்துல நான் பண்ணன். ஒரு நல்லது செய்ய வந்தன் எனக்கு நல்லதாயிடுச்சி. கதையின் நாயகனாகத்தான் சூரி இருப்பாரு. கதையின் நாயகனா இருக்க வரைக்கு அவரு ஜெயிச்சுக்கிட்டே இருப்பாரு. கதாநாயகனா மாறும் போது கஷ்டம்; அத பாத்து இருந்துக்கோ. சூரி ஜெயிச்சது நான், எல்லாரும் ஜெயிச்ச மாதிரி இருந்தது.