குவைத் தீ விபத்து- காயத்துடன் மனதில் உள்ள வலியோடு பேசும் தமிழர்!

குவைத் தீ விபத்து- காயத்துடன் மனதில் உள்ள வலியோடு பேசும் தமிழர்!

 

50 பேரின் உயிரைப் பறித்த தீ விபத்தை அடுத்து குவைத் முழுவதும் உள்ள தொழிலாளர் தங்கும் இடங்கள் உள்ளிட்ட பல குடியிருப்புகளில் ஆய்வுத் தொடங்கியுள்ளது. அலட்சியத்திற்கு காரணமான ஒரு குவைத் நாட்டவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடி வீரர் விராட் கோலிக்கு என்னாச்சு!

காலில் அடிபட்ட காயத்துடன் மனதில் உள்ள வலியையும் சேர்த்துப் பேசுகிறார் சரவணன். குவைத் நாட்டில் வேலை பார்த்து வரும் இவர், தீ விபத்து நேர்ந்த கட்டிடத்தில் தான் வசித்து வந்தார். தீ விபத்து ஏற்பட்ட தருணத்தையும், அங்கிருந்து தப்பியதையும் அவர் காணொளி மூலம் விவரித்து கூறியுள்ளார்.

 

அப்போது தமிழர் சரவணன் கூறியதாவது, “தீ விபத்து நிகழ்ந்த குடியிருப்பில் முதல் மாடியில் தான் தங்கி இருந்தேன். 04.00 மணியளவில் தீ, தீ எனக் கத்தும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தால் ஒரே புகை மட்டும் தான் இருந்தது. பால்கனியில் உள்ள கதவை உடைத்து நான் உள்பட 3 பேர் உயிர் தப்பினோம். பிறகு தீ கட்டிடம் முழுவதும் பரவியது. சிலர் படிக்கட்டுகள் மூலம் கீழே இறங்க முயற்சித்த போது, புகையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

 

எனக்கு உயிர் தான் முக்கியம்; காலில் தையல் பிரித்தவுடன் இங்கிருந்து ஊர் திரும்பப் போகிறேன். நான் உயிர் பிழைத்த போதிலும் எனது குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை” என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

“கதாநாயகனாக மாறும் போது கஷ்டம்; பாத்து இருந்துக்கோ..” – சூரியை எச்சரித்த சசிகுமார்!

தீயில் சிக்கி உயிரிழந்தவர்களை விட கரும்புகையில் சிக்கி உயிரிழந்தவர்களே அதிகம் என கூறுகிறார் குவைத் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர் ஒருவர்.