கிரிக்கெட் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் யார் யார்?

கிரிக்கெட் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் யார் யார்?

 

ஐ.சி.சி.யின் டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்காமல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குள் முன்னேறியுள்ளது.

ராகவா லாரன்ஸைத் தொடர்ந்து களமிறங்கிய நடிகர் தாடி பாலாஜி!

இந்த சூழலில், கிரிக்கெட் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் யார் யார்? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவருமான சச்சின் 4,076 பவுண்டரிகள் விளாசி அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சங்ககரா 3,015 பவுண்டரிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

“மருமகளை முதன் முதலாகப் பார்த்த போது சொன்ன அட்வைஸ்….”- மேடையில் நெகிழ்ந்த நடிகர் தம்பி ராமையா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 2,781 பவுண்டரிகளுடன் மூன்றாவது இடத்திலும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே 2,679 பவுண்டரிகளுடன் நான்காவது இடத்திலும், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விராட் கோலி 2,647 பவுண்டரிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.