“மருமகளை முதன் முதலாகப் பார்த்த போது சொன்ன அட்வைஸ்….”- மேடையில் நெகிழ்ந்த நடிகர் தம்பி ராமையா!

"மருமகளை முதன் முதலாகப் பார்த்த போது சொன்ன அட்வைஸ்...."- மேடையில் நெகிழ்ந்த நடிகர் தம்பி ராமையா!

 

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மிகவும் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராகவா லாரன்ஸைத் தொடர்ந்து களமிறங்கிய நடிகர் தாடி பாலாஜி!

இதையடுத்து, திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றித் தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் புதுமண ஜோடி, நடிகர்கள் அர்ஜுன், தம்பி ராமையா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது பேசிய நடிகர் தம்பி ராமையா, “நான் இங்கு நிற்பதற்கு காரணம் மேலே உள்ள அம்மா, அப்பா; என்னை இயக்கிக் கொண்டிருப்பது அவர்கள் வளர்த்த வளர்ப்பு; என்னிடம் ஒன்றுமில்லை. உமாபதி ஏதாவது சாதித்தால், நான் சாதித்ததாக பொருள்படும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை சாதித்தால், இவர்கள் சாதித்ததாகப் பொருள்படும். இந்த பாப்பாவை நான் முதலில் சந்தித்த போது, சொன்னது குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

 

ஒரு மனிதன் குழந்தையாகப் பிறக்கும் பொழுது, அவனது நிம்மதி என்பது தாய்- தந்தையிடம் இருக்கிறது. அதற்கு பிறகு வீதியில் விளையாடும் பொழுது யார் கூட விளையாடுகிறமோ அவர்களிடம் போகிறது நிம்மதி. பள்ளி கூடத்திற்கு போகும் போது நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் கேரக்டர் ஈர்க்கும். வேலைக்கு போகும் போது நமது நிம்மதி நிறுவனத்தின் அதிகாரிகளிடம் போகிறது.

 

தனிப்பட்ட என்று வரும் போது நமது நிம்மதி நாம் கரம்பிடிக்கப் போகிற துணையிடம் செல்கிறது. முதலில் மாமாவை பார்க்கும் பொழுது என்ன சொன்னாங்க என்பது காலம் முழுவதும் உன் நினைவில் இருக்க வேண்டும் என்று சொன்னனேன். நிம்மதி என்ற பால் உன்மடியில் வந்திருக்கிறது. எங்களுடைய எதிர்காலத்தை, எங்களுடைய அடுத்த தளத்தை நீ தாயாக இருந்து வழிநடத்த வேண்டும் என்று சொன்னேன்.

“கதாநாயகனாக மாறும் போது கஷ்டம்; பாத்து இருந்துக்கோ..” – சூரியை எச்சரித்த சசிகுமார்!

வீட்டுக்கு மருமகளாக வந்தாலும் எங்களுக்கு மகள்தான். காலமும், கடவுளும் எங்களுக்கு சம்மந்தியாக நிர்ணயிடுச்சு அர்ஜுன் சார். திருமண வரவேற்பிற்கு வருகை தந்த அனைவருக்கும் இரு குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.