தமிழகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் டிவி புகழ் பாலா ஆகியோர் ஏழை, எளியவர்களுக்கு தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் தாடி பாலாஜியும் தனது உதவிகளைச் செய்ய தொடங்கியிருக்கிறார்.
குவைத் தீ விபத்து- காயத்துடன் மனதில் உள்ள வலியோடு பேசும் தமிழர்!
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தாடி பாலாஜி. இவர், விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், அரசமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிக்கு கோப்புகளை வைக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 12,000 ரூபாய் மதிப்பிலான இரும்பு பீரோவை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் தடடி பாலாஜி, “அரசு பள்ளிகளை ஏளனமாக யாரும் பார்க்கக் கூடாது. அரசு பள்ளிகள் தான் மாநிலத்தின் அடையாளம். என்னுடைய சக்திக்கு உட்பட்டு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறேன்” என்றார்.
தொடங்கியது யூரோ கால்பந்து திருவிழா…..ரசிகர்கள் உற்சாகம்….பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
சமீப காலமாக, தமிழ் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள், ஏழை, எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.