ரயில் விபத்து நடந்தது எப்படி?- விரிவான தகவல்!

Kanchenjunga Express

 

மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் சரக்கு ரயில்- கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் 15- க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றன.

ராகவா லாரன்ஸைத் தொடர்ந்து களமிறங்கிய நடிகர் தாடி பாலாஜி!

ரயில் விபத்து நடந்தது எப்படி?

மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்கபானி ரயில் நிலையம் அருகே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறம் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இரு ரயில்களின் பெட்டிகளும் ஒன்றோடு ஒன்று மோதி உருக்குலைந்தன. குறிப்பாக, சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் 2 பெட்டிகள் பலத்த சேதம் அடைந்துள்ளன.

“கதாநாயகனாக மாறும் போது கஷ்டம்; பாத்து இருந்துக்கோ..” – சூரியை எச்சரித்த சசிகுமார்!

மேற்குவங்க ரயில் விபத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே, தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. விபத்து நடந்த பகுதிக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்துள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.