போட்டியின்றித் தேர்வாகும் கவுதம் கம்பீர்?- காத்திருக்கும் ரசிகர்கள்!

போட்டியின்றித் தேர்வாகும் கவுதம் கம்பீர்?- காத்திருக்கும் ரசிகர்கள்!

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர், போட்டியின்றித் தேர்வாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் யார் யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள கவுதம் கம்பீரின் பதவிக்காலம், நடப்பு டி20 உலககோப்பைக் கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ள நிலையில், அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வுச் செய்யும் பணியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்றழைக்கப்படும் பி.சி.சி.ஐ. ஈடுபட்டுள்ளது.

 

3,000- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பி.சி.சி.ஐ.க்கு வந்திருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஒரே ஒரு முன்னாள் வீரர் என்றால் அது கவுதம் கம்பீர் தான். ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட அணி வீரர்களை பி.சி.சி.ஐ. அணுகிய போதிலும், அவர்கள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வர தயக்கம் காட்டுகின்றனர்.

 

இந்த சூழலில், கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல். கோப்பையை வென்றிருந்ததாலும், அவருக்கு நல்ல அனுபவம் இருப்பதாலும் கவுதம் கம்பீர, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக போட்டியின்றித் தேர்வாக இருக்கிறார். மேலும், கவுதம் கம்பீருக்கு இன்று (ஜூன் 18) காணொளி வாயிலாக நேர்காணல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கவுதம் கம்பீர், டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். அமித்ஷாவின் மகன் பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய்ஷா என்பது குறிப்பிடத்தக்கது.

“மருமகளை முதன் முதலாகப் பார்த்த போது சொன்ன அட்வைஸ்….”- மேடையில் நெகிழ்ந்த நடிகர் தம்பி ராமையா!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கொல்கத்தா அணி ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்கு தாயராகி வருகின்றனர்.