அரவிந்த்சாமி பிறந்தநாளையொட்டி, ‘மெய்யழகன்’ படத்திலிருந்து புதிய போஸ்டர்!

அரவிந்த்சாமி பிறந்தநாளையொட்டி, 'மெய்யழகன்' படத்திலிருந்து புதிய போஸ்டர்!

 

நடிகர் அரவிந்த்சாமி பிறந்தநாளையொட்டி, ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் இருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

ரயில் விபத்து நடந்தது எப்படி?- விரிவான தகவல்!

‘தளபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அரவிந்த்சாமி, ரோஜா, பம்பாய் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் சித்தார் அபிமன்யூ கேரக்ட்டரில் மிரட்டியதன் மூலமாக தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

 

தொடர்ந்து தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் அரவிந்த்சாமி, தற்போது ‘மெய்யழகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கியுள்ளார். இதன் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

கிரிக்கெட் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் யார் யார்?

இந்த நிலையில், அரவிந்த் சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் புதிய போஸ்டரை படத்தைத் தயாரித்துள்ள நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.