வசூல் மழையில் ‘மகாராஜா’ திரைப்படம்….வசூலான தொகை எவ்வளவுத் தெரியுமா?

வசூல் மழையில் 'மகாராஜா' திரைப்படம்....வசூலான தொகை எவ்வளவுத் தெரியுமா?

 

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம், ரூபாய் 40 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் யார் யார்?

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய்சேதுபதி, ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது அவரது 50வது திரைப்படமான ‘மகாராஜா’ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 

சிங்கம் புலி, அபிராமி, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷப், நட்டி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த ஜூன் 14- ஆம் தேதி வெளியான நிலையில், நடிகர் விஜய்சேதுபதி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், படம் வெளியான நான்கே நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 40 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“நான் நிச்சயமாக எதிர்பார்க்கல….”- நடிகர் விஜய்சேதுபதி மகிழ்ச்சி!

இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் விஜய்சேதுபதியின் 50-வது திரைப்படம் என்பதால் திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.