இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக கம்பீர் ஓரிரு நாட்களில் நியமனம்?

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக கம்பீர் ஓரிரு நாட்களில் நியமனம்?

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் மழையில் ‘மகாராஜா’ திரைப்படம்….வசூலான தொகை எவ்வளவுத் தெரியுமா?

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம், டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருடன் முடிவுக்கு வரும் நிலையில், அப்பதவிக்கு நியமிப்பது தொடர்பாக கவுதம் கம்பீருடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேர்காணலை நடத்தினர்.

 

காணொளி மூலம் இந்த நேர்காணல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. கவுதம் கம்பீர் பயிற்சியாளராக்கப்படுவது உறுதி என்றும், நடைமுறை அடிப்படையில் அவரிடம் நேர்காணல் நடைபெற்றதாகவும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

‘சர்ஃபிரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது… ரசிகர்கள் உற்சாகம்!

42 வயதான கம்பீர், கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வுப் பெற்ற பின் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இருந்து வருகிறார். இவரது வழிகாட்டுதலில் அண்மையில் கொல்கத்தா நாடி ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.