‘சர்ஃபிரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது… ரசிகர்கள் உற்சாகம்!

'சர்ஃபிரா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது... ரசிகர்கள் உற்சாகம்!

 

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் ‘சர்ஃபிரா’ (Sarfira) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமார் நடித்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர்கள் யார் யார் தெரியுமா?- விரிவான தகவல்!

இந்த திரைப்படம், வரும் ஜூலை 12- ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. படத்தின் ட்ரெய்லர் சுமார் ஒன்றரை கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. அக்ஷ்ய்குமாரின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

வசூல் மழையில் ‘மகாராஜா’ திரைப்படம்….வசூலான தொகை எவ்வளவுத் தெரியுமா?

கடந்த 2020- ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் நேரடி ஓடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. நடிகர் சூர்யாவிற்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படமாக, இப்படம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.