கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான ‘ஜெமினி’ (GOOGLE GEMINI) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போட்டியின்றித் தேர்வாகும் கவுதம் கம்பீர்?- காத்திருக்கும் ரசிகர்கள்!
அண்மை காலமாக செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் அதிகம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் ‘ஜெமினி’ என்ற பெயரில் கூகுளும் களமிறங்கியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில், ‘ஜெமினி’ செயலி தற்போது கிடைக்கிறது. இந்த செயலியில் இந்திய மொழிகளான தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி, உருது உள்ளிட்ட 9 மொழிகளிலும் செயல்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வசூல் மழையில் ‘மகாராஜா’ திரைப்படம்….வசூலான தொகை எவ்வளவுத் தெரியுமா?
இந்திய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக ‘கூகுள் ஜெமினி’ செயல்படும் என்றும், அனைத்து தரப்புக்கு கேள்விகளுக்கும் தகுந்த பதிலை அளிக்கும் என்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.