60 ஓட்டங்களால் வென்ற RCB. பிளே ஆப் சுற்றிலிருந்து 2 ஆவது அணியாக வெளியேறியது பஞ்சாப்!

 

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பெங்களூரு அணி விராட் கோலி, பட்டிதாரின் அதிரடி அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னிலும் ஜானி பேர்ஸ்டோவ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து ரிலீ ரோசோவ் – ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ரிலீ ரோசோவ் 61 ரன்கள் குவித்து அவுட் ஆகினார்.

அடுத்த சிறிது நேரத்தில் ஷஷாங்க் சிங் 37 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் ஜிதேஷ் சர்மா 5, லிவிங்ஸ்டன் 0, சாம் கரன் 22, அசுதோஷ் சர்மா 8, ஹர்சல் படேல் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் பஞ்சாப் அணி 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.

ஆர்சிபி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பிளே ஆப் சுற்றில் இருந்து 2 -வது அணியாக பஞ்சாப் அணி வெளியேறியது.