ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக போரெல் 58, ஸ்டப்ஸ் 57 ரன்கள் குவித்தனர். லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
3 மற்றும் 4-வது இடத்துக்கு சென்னை, ஐதராபாத், சென்னை, பெங்களூரு அணிகள் இடையே போட்டி நிலவும். டெல்லி மற்றும் லக்னோ அணி பிளே ஆப் சுற்று வருவது நடக்காத காரியமாக மாறிவிட்டது.