ஹார்திக் பாண்டியாவுக்கு 2025 ஐ.பி.எல் ஆட தடை!

ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி இந்த பருவத்திற்காக விளையாடிய கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மந்த கதியில் ஓவர்களை வீசிய குற்றத்திற்காக (Slow over rate) அடுத்த ஆண்டுக்கான (அதாவது 2025 ஆம் ஆண்டுக்கான) ஐ.பி.எல் தொடரில் தான் ஆடவிருக்கும் முதல் போட்டியில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தினை இழந்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தப் பருவ காலத்தில் மூன்றாவது முறையாக மந்த கதியில் ஓவர்களை வீசியதால் ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மந்த கதையில் ஓவர்களை வீசிய குற்றத்திற்காக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு அவர்களது போட்டி சம்பளத்தில் 12 இலட்சம் இந்திய ரூபாய் அல்லது ஊதியத்தின் 50 சதவீதத்தினை அதனை அபராதமாகவும் செலுத்த நிர்ப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறியிருப்பதோடு ஐந்து தடவைகள் ஐ.பி.எல் சம்பியன் பட்டத்தை பெற்ற அவ்வணி இம்முறை ஹார்திக் பாண்டியாவின் தலைமையில் இம்முறை புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தினை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.