கூல் சுரேஷின் (CSK) புதிய அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிது!

சமீபத்தில் மஞ்சள் வீரன் திரைப்படத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் கூல் சுரேஷின் அரசியல் நகர்வுகள் பற்றி கேள்வி எழுப்பிய பொழுது அவர் புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகவும் அந்த கட்சியின் பெயர் கூல் சுரேஷ் கட்சி (CSK) என்றும் தெரிவித்தார்.

 

 

 

மேலும் அவர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். 

 

 

 

குறித்த சிஎஸ்கே கட்சியின் சின்னம் மற்றும் கொடிகள் தயாராகி வருவதாகவும் கட்சியின் பதிவுக்காக தான் டெல்லி செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

கட்சி பற்றிய மேலதிகமான அறிவிப்புக்களை மற்றுமொரு ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.