டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பரிசுத் தொகையை அள்ளி வீசிய ஐ.சி.சி.

டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பரிசுத் தொகையை அள்ளி வீசிய ஐ.சி.சி.

 

டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான பரிசுத் தொகையை அள்ளி வீசியுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐ.சி.சி.

“இந்தியன் 2 படத்தில் உள்ள சர்ப்ரைஸ்…சித்தார்த்தின் ரோல் என்ன?”- போட்டு உடைத்த அந்தணன்!

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர், அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டி20 உலகக்கோப்பைத் திருவிழாவைக் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான பரிசுத்தொகையை ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குறிப்பாக, இதுவரை இல்லாத வகையில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் உள்ளிட்டோர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

நடப்பு டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான பரிசுத்தொகையாக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூபாய் 93.52 கோடியை அறிவித்துள்ளது ஐ.சி.சி. அதன்படி, கோப்பையை வெல்லும் அணிக்கு ரூபாய் 20.36 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. RUNNERS-UP அணிக்கு ரூபாய் 10.6 கோடியும்,அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூபாய் 6.5 கோடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.